உங்க பேருல இரண்டு பான் கார்டு இருக்கா? 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டணும்! மத்திய அரசு போட்ட உத்தரவு! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட பான் அட்டையை வழங்கும் பான் 2.0 திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், ஏற்கனவே வழங்கப்பட்ட நிரந்தர கணக்கு எண் அட்டைகளை மாற்றி, புதிய க்யூஆர் கோடு கொண்ட பான் அட்டைகள் இலவசமாக வழங்கப்படும். 

பான் அட்டையாளர்களுக்கும் வரி செலுத்துவோருக்கும் இந்த புதிய அட்டைகள் பல்வேறு செயல்பாடுகளை எளிமைப்படுத்தும். குறிப்பாக, க்யூஆர் கோடு வழியாக தகவல்களை துல்லியமாக சரிபார்க்க முடியும். 

மேலும், ஒருவரின் பெயரில் பல பான் அட்டைகள் இருந்தாலோ, தவறான பான் அட்டைகள் இணைக்கப்பட்டிருந்தாலோ, அவற்றை எளிதில் கண்டறிய வசதி கிடைக்கும். 

இந்த தவறுகள், அறியாமையால் நிகழ்ந்தவையாக கருதப்பட்டாலும், வருமான வரித்துறை சட்டத்தின் 1961ன் 272 பி பிரிவின் கீழ் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும். 

பான் 2.0 திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததும், போலி பான் அட்டைகள் மற்றும் தவறான தகவல்களை சரியாக கண்டறிய துணைபுரியும். இதன் மூலம் டிஜிட்டல் மயமாக்கல் மேலும் மேம்படுத்தப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PAN Card central Govt Announce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->