பூமியை துல்லியமாக கண்காணிக்கும் பி.எஸ்.எல்.வி. சி-52! 14 -ஆம் தேதி விண்ணில் பாய்கிறது.! - Seithipunal
Seithipunal


பூமியை துல்லியமாக கண்காணிக்கும் செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட் வரும் 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

1,710 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ்.-04 என்ற செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட் வரும் 14 -ஆம் தேதி ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த செயற்கை கோளானது, வானிலையின் அனைத்து சூழ்நிலைகளிலும் விவசாயம், வனம், தோட்டங்கள், மண்ணின் ஈரப்பதம், நீரியல் ஆய்வு மற்றும் வரைபடங்கள் குறித்து துல்லியமாக, உயர் தர படங்களை எடுத்து அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு ரேடார் இமேஜிங் செயற்கை கோளாகும். பூமியில் இருந்து சுமார் 529 கி.மீ. உயரத்தில், சூரிய ஒத்திசைவான துருவ சுற்றுப் பாதையில் சுற்றும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கை கோள், வரும் 14-ஆம் தேதி காலை 5.59 மணிக்கு பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த ராக்கெட்டில் மாணவர் செயற்கை கோளான "இன்ஸ்பைர்சாட் -1" உட்பட இரண்டு சிறிய செயற்கைகோள்களும் பொருத்தப்பட்டு செலுத்தப்படுகிறது.

ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் இறுதிக்கட்ட பணியான, 25 மணி நேர கவுண்ட்டவுன் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 4.29 மணிக்கு தொடங்குகிறது. இது இஸ்ரோவின் இந்த ஆண்டின் முதல் செயற்கை கோளாகும்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு ராக்கெட் ஏவும் பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PSLV ROCKET


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->