அதிரடியாக விலையை குறைத்த சாம்சங்.! ஸ்மார்ட் போன் வாங்க சரியான நேரம்.!
samsung Galaxy F23 5G smartphone
சாம்சங் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் சாம்சங் கேலக்ஸி F23 5ஜி மாடலை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், தற்போது சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது 5ஜி ஸ்மார்ட்போன் விலையை குறைத்துள்ளது.
இதற்கு முன்னதாக கேலக்ஸி F23 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 17,499 விலையிலும், 6 ஜிபி ரேம் 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 18,499 விலையிலும் விற்பனை செய்யப்பட்டது.
தற்போது கேலக்ஸி F23 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் 128 ஜிபி மெமரி மாடல் ரூ.15,999 எனவும், 6ஜிபி ரேம் 128 ஜிபி மெமரி மாடல் ரூ.16,999 எனவும் விலை குறைக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதன் சிறப்பு அம்சங்கள்:
*6.6 இன்ச் FHD+TFT, 120Hz டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.
*ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
*4ஜிபி ரேம் 128 ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் 128 ஜிபி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
*50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
*5000mAh பேட்டரி வசதி வழங்கப்பட்டுள்ளது.
*25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
*டூயல் சிம் ஸ்லாட் மற்றும் 3.5 எம்எம் ஆடியோ போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
*பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஃபாரஸ்ட் கிரீன், அக்வா புளூ மற்றும் கூப்பர் பிளஷ் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
English Summary
samsung Galaxy F23 5G smartphone