இந்தியாவில் மாஸாக ரீ எண்ட்ரி கொடுக்க இருக்கும் ஆர்எக்ஸ் 100.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த பைக்குகளில் ஒன்று யமஹா ஆர்எக்ஸ் 100. இன்றளவும் இந்த பைக்குக்கு இந்தியாவில் பெரும் அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். 

இந்தியாவில் ஆர்எக்ஸ் 100 பைக் உற்பத்தி 1985 முதல் 1996 வரை நடைபெற்றது. 1996 பின் இந்தியாவில் ஆர்எக்ஸ் 100 பைக் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஆனாலும், அந்த பைக் மீதான மோகம் தற்போது இந்தியாவில் அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாகஆர்எக்ஸ் 100 பைக்குகளின் உதிரி பாகங்களை யமஹா நிறுவனம் தற்போது வரை தயாரித்து வருகிறது. இதன் மூலம் பழைய யமஹா வைக்குகளை புதுப்பித்து வாகன ஓட்டிகள் இயக்கி வருகின்றனர். 

இந்நிலையில், இந்தியாவில் மீண்டும் ஆர்எக்ஸ் 100 பைக் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக யமஹா நிறுவனத்தின் இந்திய தலைவர் இஷினி ஷிஹானா தெரிவித்துள்ளார். 2026 அல்லது அதற்கு அடுத்த வரும் ஆண்டுகளுக்குள் ஆர் எக்ஸ் 100 பைக்குகள் உற்பத்தி மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதிகம் மாசை ஏற்படுத்தும் டூ-ஸ்டோக் ரக இன்ஜின் அல்லாமல், நவீன இன்ஜின் உள்ளிட்ட பல்வேறு  மாற்றங்களுடன் புதிய ஆர் எக்ஸ் 100 பைக்குகள் உற்பத்தி செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yamaha RX 100 will be launched in india


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->