Va Varalam Va | இசை வெளியிட்டு விழாவிற்கு தயாரான "வா வரலாம் வா"! வெளியான புதிய அப்டேட்! - Seithipunal
Seithipunal


எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா எஸ்பிஆர் தயாரிக்கும் திரைப்படம் "வா வரலாம் வா". தயாரிப்பாளர் எஸ்பிஆர், இயக்குநர் எல்.ஜி. ரவிசந்தர் உடன் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளார். 

இப்படத்தில் கதாநாயகனாக, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ், முதன் முறையாக கதாநாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக கருமேகங்கள் கலைகின்றன படத்தில் நடிப்பில் கலக்கியிருக்கும் மஹானா சஞ்சீவி, நடித்திருக்கிறார். இவர்களோடு ரெடின் கிங்ஸ்லி, காயத்ரி ரேமா, மைம் கோபி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். 

இசையமைப்பாளராக தேனிசைத்தென்றல் தேவா, ஒளிப்பதிவாளராக கார்த்திக் ராஜா, எடிட்டராக ராஜா முகமது, நடன இயக்குநராக நோபல், சண்டை பயிற்சியாளராக இளங்கோ என திரைத்துறையில் சாதித்த தொழில்நுட்ப கலைஞர்களே இப்படத்தில் பணியாற்றி இருக்கின்றனர்.  

இப்படத்தில் தேவாவின் இசையில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளது. கருத்துள்ள கானா பாடல், இளைஞர்களுக்கான காதல் பாடல், குழந்தைகளுக்கான மிமிக்ரி பாடல், மனதை வருடம் மெலோடி பாடல் என அனைத்து விதமான ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும் விதமாக நான்கு வகையான பாடலாக அமைந்திருக்கிறது. 

தேனிசை தென்றல் தேவாவின் இசைக்கு ஈடுகொடுக்கும் வகையில், காதல் மதி, எஸ்பிஆர், கானா எட்வின் ஆகியோர் பொருத்தமான பாடல் வரிகளை கொடுத்து, நாங்களும் திறமையில் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றனர். 

சிறிது கால இடைவேளைக்கு பிறகு தேனிசைத்தென்றல் தேவா இசையில் வருவதால், இசை ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆல்பம் ஹிட் ஆகும் அளவிற்கு அனைத்து பாடல்களுமே சிறப்பாக வந்துள்ளதால், இசை வெளியிட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இசை வெளியீடு தேதி விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளரும், இயக்குனருமான எஸ்பிஆர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Audio launch of Va varalam va


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->