Dec 1-ல் வெளியான அனைத்து திரைப்படங்களையும் பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்த "வா வரலாம் வா" - Seithipunal
Seithipunal



தேனிசை தென்றால் தேவாவின் இசையில், எஸ்.ஜி.எஸ் கிரியேட்டிவ் மீடியா சார்பில் எஸ்.பி.ஆர் தயாரிப்பில், கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி வெளியான ‘வா வரலாம் வா' திரைப்படம், குழந்தைகள், குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக அமைந்துள்ளது.
 
தயாரிப்பாளர் எஸ்.பி.ஆர் உடன் இணைந்து எல்.ஜி.ஆர் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகனாக பாலாஜி முருகதாஸ், நாயகியாக மஹானா சஞ்சீவி, வில்லனாக மைம் கோபி நடித்திருக்கிறார். 

முக்கிய கதாபாத்திரங்களில் ரெடின் கிங்ஸ்லி, காயத்ரி ரெமா, சிங்கம் புலி, இயக்குநர் சரவண சுப்பையா, கிரேன் மனோகர், தீபா சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் உடன், 40 குழந்தைகளும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

டிசம்பர் 1 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான "வா வரலாம் வா" திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாக முத்திரை பதித்துள்ளது.

'தேனிசை தென்றல்' தேவாவின் பின்னணியி இசையும், பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக குழந்தைகள், குடும்பங்கள் கொண்டாடும் படமாக "வா வரலாம் வா" அமைந்துள்ளது. 

இந்நிலையில், IMDb தளத்தில் "வா வரலாம் வா" திரைப்பத்திற்கு 9.5/10 ரேட்டிங் ரசிகர்களால் கொடுக்கப்பட்டுள்ளது. 


டிசம்பர் 1 ஆம் தேதி வெளியான நயன்தாராவின் அன்னபூரணி, ஹரிஷ் கல்யாணின் பார்கிங், நாடு, சூரகன் மற்றும் அனிமல் படங்களை பின்னுக்கு தள்ளி "வா வரலாம் வா" திரைப்படம் 9.5/10 ரேட்டிங் உடன் முதலிடம் பிடித்துள்ளது.

மேலும், Book My Show தளத்தில் 'வா வரலாம் வா' திரைப்படத்தை பார்த்த ரசிகர்களால் 8.1 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 1-ல் வெளியான மற்ற படங்களை காட்டிலும் 'வா வரலாம் வா' திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று முதலிடம் பிடித்து உள்ளது.

மேலும்,  பொதுமக்கள் மத்தியிலும் (public Review) நேர்மறையையான விமர்சனங்களையே இத்திரைப்படம் பெற்றுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Va Varalam Va IMDb rating in first


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->