சரவெடி தெறிக்க.!! ஆக்ஷன் கிங் அர்ஜுனின் "ஹரோல்ட் தாஸ்" கிளிம்ஸ் வீடியோ வெளியீடு.!!
Actor arjun leo movie harold das glimpse video released
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராக் ஸ்டார் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் "லியோ" படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பட்டத்தில் தமிழ் திரை உலக பட்டாளமே நடித்து வரும் நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் சுதந்திர தினமான இன்று ஆக்சன் கிங் அர்ஜுன் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதற்காக லியோ படக்குழு ஆக்சன் கிங் அர்ஜுனனின் கேரக்டரின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என அறிவித்திருந்தது.
அதன்படி மாலை 5 மணி அளவில் நடிகர் அர்ஜுன் பிறந்தநாளுக்காக புதிய கிளிம்ஸ் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. லியோ படத்தில் அர்ஜுனின் "ஹரோல்ட் தாஸ்" கதாபாத்திரத்தின் பெயருடன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Actor arjun leo movie harold das glimpse video released