தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. 

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில்  லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

07 july 16 districts rain in tamilnadu


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->