தமிழகத்தில் இன்றும், நாளையும் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்றும், நாளையும் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. நேற்று தமிழகத்தில் 19 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. இதில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 108 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.

இந்நிலையில், இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 degree Celsius temperature rise today and tomorrow in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->