புயலாக மாறுகிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - வானிலை மையம் அதிர்ச்சி தகவல்.!
air low pressure change storm metereological center info
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே புதுச்சேரி அருகே நாளை கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும். புயலாகவே நாளை கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும்போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலாக உருவாக வாய்ப்பில்லை என்று நேற்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில், தற்போது புயல் உருவாக உள்ளது என்று தெரிவித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
air low pressure change storm metereological center info