தமிழகத்தில் அக்.29, 30 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!! - Seithipunal
Seithipunal


தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு கடற்பகுதியிலும், தென்தமிழக பகுதிகளிலும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதே நிலை அடுத்த இரண்டு நாட்களுக்கும் நீடிக்கும் என தெரிவித்துள்ள நிலையில் வரும் அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் அக்டோபர் 29ஆம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர்* நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

அதேபோன்று அக்டோபர் 30 ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், விருதுநகர், தூத்துக்குடி, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வருமானம் ஓரளவு மேகமூட்டத்திலும் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chance of heavy rain in Tamil Nadu on October 29 and 30


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->