தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக கோடை வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையால் வெப்பம் தணிந்து மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 

இதற்கிடையே வரும் மே 15 ஆம் தேதி வாக்கில் வங்க கடலில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 

இதனால் ஒரு நாட்களில் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று இரவு 7 மணி வரை தமிழ்நாட்டில் 22 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai RMC announced rain will occur 22 districts


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->