தமிழகம், புதுவையில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுவையில் ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

இன்று முதல் 24/02/2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டியிருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவியது. அதிகபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தியில் 35.5 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக நாமக்கல்லில் 18.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dry weather will prevail in Tamil Nadu and puducherry for 5 days


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->