மிரள வைக்கும் மிக்ஜம் புயல் - 4 மாவட்டத்தில் பள்ளிக்கு கல்லூரிகளுக்கு விடுமுறை.! - Seithipunal
Seithipunal


வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், இன்று புயலாக வலுவடைய உள்ளது. இந்த புயலுக்கு 'மிக்ஜம்' என்று பெயரிடப்பட உள்ளது.

இந்தப் புயல் தொடர்ந்து கடலோர பகுதிகளையொட்டி வடக்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திர கடற்கரையை நாளை மறுதினம் காலை சென்றடைந்து, நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், வட கடலோர பகுதிகளில் வரும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மழை, காற்றுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். 

இதேபோன்று திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four districts schools and colleges holiday for rain


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->