12 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம்!
Good news for the people of Tamil Nadu Heavy rain warning for 12 districts
இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் மூன்றாம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வருகின்ற 1ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில், கன மழை எச்சரிக்கை தொடர்பாக, 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பி உள்ளது.
கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து, முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Good news for the people of Tamil Nadu Heavy rain warning for 12 districts