தமிழகத்தில் பொய்த்துப்போனதா பருவமழை?...18 மாவட்டங்களில் இயல்பை விட குறைவு!
Has the monsoon failed in tamil nadu less than normal in 18 districts
தமிழகத்தில் நடப்பு ஆண்டின் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கியது. தற்போது மெல்ல மெல்ல தீவிரம் அடைந்து வருகிறது. முன்னதாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கன மழைக்கான ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டது. இதனால் சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் பொதுமக்கள் தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.
மேலும், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரங்க நாதன் சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கியது. இதே போல் தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்களிலும் ஆங்காங்கே, மிதமான மழை பெய்து பெறுகிறது.
வடகிழக்கு பருவமழையின் காலம் பாதியாக முடிந்த நிலையில், இதுவரை பெய்த மழைப் பொழிவின் மூலம் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை குறைவாகவே பதிவாகி உள்ளது.
அந்த வகையில், 18 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 14 செ.மீ. மழை பெய்துள்ளது. அங்கு 51 சதவீதம் மழை பற்றாக்குறையாக உள்ளது. மேலும், தென்காசி மாவட்டத்தில் 41 சதவீதம் குறைவாக பெய்து உள்ளது. காஞ்சிபுரத்தில் 35 சதவீதமும், நாகப்பட்டினம் 32 சதவீதமும் இயல்பை விட குறைவாகவே மழை பெய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Has the monsoon failed in tamil nadu less than normal in 18 districts