தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்! வானிலை மையம் எச்சரிக்கை!! - Seithipunal
Seithipunal


இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

இந்நிலையில் இன்று தமிழக முழுவதும் 16 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தர்மபுரி, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதற்கிடையே சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருக்கழுக்குன்றம், வண்டலூர், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம் ஆலந்தூர், மதுரவாயல், அமைந்தகரை, எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதனால் சென்னை முழுவதும் இதமான சூழல் நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain alert for 16 districts in TamilNadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->