தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்!! வானிலை மையம் எச்சரிக்கை!!
Heavy Rain for 4days in TamilNadu
தென் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவுவதால் தென் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதன்படி இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஊரிடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (அக்.28) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 29ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் அக்டோபர் 30ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, நீலகிரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Heavy Rain for 4days in TamilNadu