5 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை.!! வானிலை மையம் எச்சரிக்கை!
Heavy rain in 5 districts in TamilNadu
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை ஹாமூன் புயலாக வலுப்பெற்று இன்று அதிதீவிர புயலாக வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவியது. இது இன்று காலை மேலும் வலுப்பெற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்க கடல் பகுதியில் மிகத் தீவிர புயலாக நிலை கொண்டது. இது மேலும் வட கிழக்கு திசையில் நகர்ந்து புயலாக வழிவிழந்து வங்கதேச கரையை கெபுபரா மற்றும் சிட்டகாங் இடையே வரும் செப்டம்பர் 25ஆம் தேதி, அதாவது நாளை மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதை வேளையில் நேற்று மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய மிக தீவிர தேஜ் புயல் இன்று காலை தெற்கு அல்-கைதா அருகே ஏமன் கடற்கரையை கடந்தது. இந்த நிலையில் இன்று தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலும் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதன்படி தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஊரில் இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உளளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக முக்கத்துடன் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Heavy rain in 5 districts in TamilNadu