வானிலையில் திடீர் மாற்றம்.! சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை.!! - Seithipunal
Seithipunal


மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 28 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. குறிப்பாக சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

சென்னை பொருத்தவரை இன்று காலை முதல் வானம் மேகமூட்டமாக இருந்து வந்த நிலையில் மாலையில் திடீரென ஏற்பட்ட வானிலை மாறுபாடு காரணமாக சென்னையின் புறநகர் பகுதிகளான மதுரவாயல், ராமாபுரம், வானகரம், வளசரவாக்கம், போரூர், சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

அதே போன்று தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், சேலையூர், மாடம்பாக்கம், சிட்லபாக்கம், குரோம்பேட்டை, குன்றத்தூர், மாம்பலம், அம்பத்தூர், பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. மாலை நேரத்தில் திடீரென கன மழை பெய்து வருவதால் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain in Chennai and surrounding


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->