குளு குளு!!! 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!!!- சென்னை வானிலை ஆய்வு மையம்
Heavy rain likely 16 districts Chennai Meteorological Department
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மழை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,"தமிழகத்தில் ஓரிரு இடங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் வருகிற 10-ந்தேதி வரை மிதமான மழை பெய்யும்.

தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல், மதுரை,நெல்லை, விருதுநகர், கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர்,தருமபுரி, சேலம், தேனி,ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் கனமழை பெய்யும் போது, 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.நீலகிரி, தேனி, திருப்பூர்,கோவை, ஈரோடு, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.
சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மதிய வேளைகளில் 36° செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவாகக்கூடும்" எனத் தெரிவித்துள்ளது.
கோடைவெயிலுக்கு இதமாக மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.
English Summary
Heavy rain likely 16 districts Chennai Meteorological Department