தமிழகமெங்கும் 15 மாவட்டங்களில்.. சென்னையிலும் இருக்காம்! வானிலை மையம் எச்சரிக்கை!!
Heavy rain occurred 15 districts including Chennai in TamilNadu
தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்க சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதியிலும், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஒரு சில பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஆலந்தூர், குன்றத்தூர், மதுரவாயல், பூவிருந்தவல்லி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Heavy rain occurred 15 districts including Chennai in TamilNadu