வெயிலும் குட்பை.. இந்த 6 மாவட்டங்களில் மே 7 வரை மழைக்கு வாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தி வேலூரில் 44.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

அதனைத் தொடர்ந்து ஈரோட்டில் 44 டிகிரி செல்சியஸ், வேலூரில் 43.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக வட மற்றும் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. 

இதற்கிடையே நேற்று வட தமிழ நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அதன் படி கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 11.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியில் ஒன்பது மில்லி மீட்டரும் ராணிப்பேட்டையில் 8.4 மில்லி மீட்டர் என மழை பதிவாகியுள்ளது. 

இந்த நிலையில் வரும் மே 7 ஆம் தேதி வரை வடதமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய ஆறு மாவட்டங்களில் வரும் ஏழாம் தேதி வரை பரவலாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain occurred 6 districts until may7


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->