இடி, மின்னலுடன் கன மழை பெய்யும்! 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
Heavy rain warning for 21 districts in TamilNadu
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழையானது வரும் செப்டம்பர் 25ஆம் தேதி நிறைவடைய உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் வட மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 21 மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Heavy rain warning for 21 districts in TamilNadu