லேட்டா வந்ததாலும் வெளுத்து வாங்கும்!! காற்றழுத்த தாழ்வு பகுதியால் கேரளாவுக்கு கனமழை எச்சரிக்கை!! - Seithipunal
Seithipunal


தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அரபிக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்த சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. 

அடுத்த 36 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு-வடமேற்கு திசையில் நோக்கி நகரக்கூடும் எனவும், இதன் காரணமாக கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொல்லம், இடுக்கி, ஆலப்புழா, பத்திரம்திட்டா ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று மேலும் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக மழை பெய்யும் மலைப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain warning for Kerala due to low pressure area


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->