சென்னையில் இரவு 10 மணி வரை கனமழை பெய்யும்! வானிலை மையம் எச்சரிக்கை!
heavy rain warning till 10pm in Chennai
தமிழகத்தின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வட வங்காள கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் இன்று இரவு 10 மணி வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி சென்னையின் புறநகர் பகுதிகளான மதுராந்தகம், குன்றத்தூர், திருக்கழுக்குன்றம், உத்திரமேரூர், பொன்னேரி, வண்டலூர், திருப்போரூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் நெமிலி, பள்ளிப்பட்டு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதேபோன்று சென்னையின் முக்கிய பகுதிகளான பெரம்பூர், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, அயனாவரம், மாதவரம், மயிலாப்பூர், அம்பத்தூர், பூவிருந்தவல்லி, புரசைவாக்கம், கிண்டி, எழும்பூர் ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
English Summary
heavy rain warning till 10pm in Chennai