தமிழகத்தில் 11ம் தேதி வரை கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் தகவல்!
Heavy rain will fall in TamilNadu till September11
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் செப்டம்பர் 11ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெயர் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை உட்பட வட கட கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Heavy rain will fall in TamilNadu till September11