இன்னும் டிசம்பர் மாசமே வரல அதுக்குள்ளயா!...சென்னையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை!...19 விமான சேவைகள் பாதிப்பு! - Seithipunal
Seithipunal


சென்னையில் நேற்று சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால், சென்னை விமான நிலையத்தில் 19 விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.


சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர்,  சேத்துப்பட்டு, அமைந்தகரை, புரசைவாக்கம், பாரிமுனை, கிண்டி, மதுரவாயல், ஈக்காட்டுத்தாங்கல், வானகரம், அம்பத்தூர், திருவேற்காடு, அனகாபுத்தூர், ஆவடி உள்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

இந்த நிலையில், சூறைக்காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை செய்ததால் விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்திற்கு  வருகை தந்த 9 விமானங்கள் மற்றும் 10 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 19 விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.

பின்னர் வானிலை சீரானதும், வானில் வட்டமடித்துக்கொண்டிருந்த விமானங்கள் ஒவ்வொன்றாக தரையிறங்கியது. மேலும் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் வாகன ஓட்டிகள் மற்றும் அலுவலகம் சென்று வீடு திரும்பியவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

It is not even December yet Heavy rain with storm in Chennai 19 flight services affected


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->