50 கி.மீ வேகத்தில் வீசப்போகும் சூறைக்காற்று.. தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கப்போகும் பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!
july weather report
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இடங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில நகரங்களில் லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் ஏற்காடு, கோவை மாவட்டம் வால்பாறையில் தலா 50 மி.மீ மழை பெய்துள்ளது. கோவை மாவட்டம் சின்ன கல்லறையில் 40 மி.மீ, நீலகிரி மாவட்டம் நடுவட்டம், தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் தலா 30 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மத்திய வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் அப்பகுதியில் மீனவர்கள் ஜூலை 5ஆம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் மத்திய அரபிக் கடல் பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அறிவு கடல் பகுதியிலும் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் ஜூலை 7ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.