மீனவர்களே உஷார்.!! நவ.14ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.!!
Low pressure area is forming in bay of bengal on nov14
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கிய நிலையில் 42 சதவீதம் வரை மழை குறைவாக பதிவானது. நவம்பர் மாதத்தில் சராசரி அளவு மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் வங்கக்கடலில் வரும் நவம்பர் 14ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நவம்பர் 16ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற உள்ளது. இதன் காரணமாக வரும் நவம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் தென் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கடலோர ஆந்திரா ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வரும் நவம்பர் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் வங்க கடலில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Low pressure area is forming in bay of bengal on nov14