டிச.5ல் உருவாக போகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! புயலாக மாற வாய்ப்பு! - Seithipunal
Seithipunal


அந்தமான் கடற்பகுதியில் வரும் டிசம்பர் 5ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும். 

அதேபோன்று டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களிலும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் எனவும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வரும் டிசம்பர் 5ஆம் தேதி அந்தமான் கடப்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியை உருவாகும்" என தெரிவித்துள்ளார். 

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தென்மேற்கு திசையில் நகர்ந்து தமிழகத்தை நெருங்க கூடும். இந்த காற்றழுத்த மண்டலம் சென்னை மற்றும் புதுச்சேரிக்கு இடையே கரையை வணக்கம் என எதிர்பார்க்கப்படுகிறது.  காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாகவும் வாய்ப்பு உள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியினால் டெல்டா மற்றும் வட தமிழக பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

low pressure area will develop in the Andaman area on Dec5


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->