தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டிய வளிமண்டலத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. 

அதன்படி அடுத்த 3 மணி நேரத்திற்கு ஈரோடு, சேலம், தர்மபுரி, ராமநாதபுரம், மயிலாடுதுறை, தென்காசி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதேபோன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், விருதுநகர், பெரம்பலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

moderate rain in 18 districts of Tamil Nadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->