வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், ஆங்காங்கே வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல அடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வரும் 7-ஆம் மற்றும் 87-ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு உள்ளது. இதற்கிடையே நாளை மறுதினம் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகும் என்றும், அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் அது தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக நாளை மறுதினம் அந்தமான் கடல் பகுதியில் மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், அதற்கு அடுத்த நாள் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new barometric depression from apr 7


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->