என்ன ஒரே பனிமூட்டமா இருக்கு! இதான் காரணமா? ஜில்லுனு ஒரு செய்தி சொன்ன வானிலை ஆயவு மையம்!
Northeast monsoon IMD Rain and weather report
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்தது உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், இது அரபிக்கடல் பகுதிக்கு சென்று விடும். காற்றழுத்த தாழ்வு பகுதி வலுகுறைந்தாலும் அதன் ஈரப்பதம் ஆங்காங்கே காணப்படும். இதன் காரணமாக தமிழகத்தில் வரும் ஜனவரி 2 ஆம் தேதிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் இன்னும் 3 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 3 நாட்களில் அது மேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு இலங்கை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த 6 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு உள்ளது.
நாளை முதல் 30 தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
வருகிற 31 மற்றும் ஜனவரி 1-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
English Summary
Northeast monsoon IMD Rain and weather report