மக்களே உஷார்!...தமிழத்தில் நாளை தொடங்குகிறது பருவமழை!..முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தலைமை செயலாளர் உத்தரவு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதை யொட்டி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்  உள்ளிட்ட 4 மாவட்டங்களில்   அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று உருவாக வாய்ப்பு உள்ளதால், இன்று முதல் 17-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை தொடரும் என்று  வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

நாளை மறுதினம் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், சில நேரங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People alert monsoon starts tomorrow in tamil chief secretary orders to intensify precautionary measures


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->