சென்னைக்கு இது சிவப்பு தக்காளி சீசன் - தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர், "சென்னை , காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று முதல் மழை பெய்யத் தொடங்கும். இதை இந்த மாவட்டங்களுக்கு இது சிவப்பு தக்காளி சீசன் என்று கூறலாம்.

நகரி மலை அருகே காற்று உருவாகி வருகிறது. நிலத்தில் இருந்து கடற்கரையை நோக்கி காற்று வீசுகிறது அங்கு காற்று நகர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. எனவே இன்று மாலை முதல் சென்னையில் சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்யக்கூடும்" என்று கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதலே வெயில் வாட்டி வருகிறது. அக்னி நட்சத்திரம் ஆரம்பித்ததும் இன்னும் வெயில் கொடுமை அதிகமாகியது. குறிப்பாக மே மாதம் முழுவதும் வீடுகளில் இரவு நேரங்களில் புழுக்கம் நிலவியது. கோடை மழை பெய்து குளிர்வித்த போதும் இந்த புழுக்கம் தொடர்ந்தது.

தென்மேற்கு பருவமழை கடந்த மே 30ம் தேதி தொடங்கிய நிலையில், சற்று வெப்பம் தணிந்துள்ளது. ஆனால் இன்றும் காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது சென்னையில் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Red Tomato Alert For Chennai TamilNAdu Weatherman Update


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->