அட டடடா!!! தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பம் சுட்டெரிக்கும்!!! - சென்னை வானிலை ஆய்வு மையம்
Tamil Nadu will be scorching hot for 3 days Chennai Meteorological Department
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டிருப்பதாவது,"தமிழகத்தில் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.தமிழகத்தில் 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2°-3° செல்சியஸ் உயரக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இன்று மற்றும் நாளை வரை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.மேலும் 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2°-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
27-ந்தேதி மற்றும் 28-ந்தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் இயல்பை விட 2°-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்." எனத் தெரிவித்துள்ளது.கோடைக்கு காலம் முடியும் வரை வெப்பம் சற்று அதிகமாகத்தான் இருக்கும் போல என மக்கள் எண்ணி, தங்களது உடலுக்குத்தேவையான உணவுகளை சரியாக உட்கொள்ள பழக வேண்டும்.
English Summary
Tamil Nadu will be scorching hot for 3 days Chennai Meteorological Department