தமிழகத்தில் வரலாறு காணாத வானிலை மாற்றம்! நடக்கப்போவது என்ன? வெளியான வெதர்மேன் ரிப்போர்ட்!
tamilnadu weatherman report for coming days
தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்தது ஃபாணி புயல். இந்தப் புயலின் காரணமாக தமிழகத்தில் மழை பொழியும் வெப்பம் தணியும், குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
ஆனால் ஃபாணி புயல் தனது பயணத்தை மாற்றி ஒரிசா பக்கம் கரை ஒதுங்க தயாராகி சென்று விட்டது. இது தமிழகத்திற்கு ஏமாற்றம் என்றாலும் ஒரு வகையில் தமிழகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் இதுவரை இல்லாத வேகத்தில் தமிழகம் அதிக அளவில் பாதிக்கப்படக் கூடிய அளவிலான வேகத்தில் இந்த புயலானது வீசக் கூடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை இந்த புயல் தாக்கியிருந்தால் தமிழகமானது கடுமையான பாதிப்புகளை சந்தித்திருக்கும்.
எப்பொழுதும் புயல் வீசிய பிறகு அங்கே வறண்ட சூழ்நிலை நிலவும் இதனால் வரும் நாட்களில் தமிழகத்தில் கோடை வெப்பத்தின் அளவு கடுமையாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் எனும் பெயரில் இருக்கும் பிரதீப் ஜான் என்பவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவின்படி புயல் நமக்கு இல்லாமல் சென்று விட்டது. ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் வெயிலின் தாக்கம் 40 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதுவும் குறிப்பாக தமிழகத்திலேயே அதிகபட்சமாக வேலூர் மற்றும் திருத்தணி பகுதிகளில் 44 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்தபடியாக பார்த்தீர்களென்றால் வட மாவட்டங்களான திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் தென் மாவட்டமான விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக 42 டிகிரி வரையும், மதுரை, நாமக்கல், திருச்சி, நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 41 டிகிரி முதல் 42 டிகிரி வரையும், கரூர், சேலம், தருமபுரி, ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 40 டிகிரி முதல் 41 டிகிரி வரையும், ஆனால் அதே நேரத்தில் கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை சராசரியாக 40 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை இருக்கக்கூடும் எனவும், சென்னை புறநகர் பகுதியில் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை வெயிலின் தாக்கம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மேற்கு பகுதி மற்றும் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், பூந்தமல்லி, ஆவடி போன்ற பகுதிகளில் 42 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே வறட்சியுடன் கூடிய வெப்பம் வர இருப்பதால் மக்கள் வெயிலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், வெளியில் செல்லும்பொழுது குடை எடுத்து செல்ல வேண்டியது அவசியமான ஒன்றாகவும், கூடவே அதிகப்படியான தண்ணீர் பழரசங்கள் நீர் பொருட்களை உட்கொள்ள வேண்டிய அவசியமும் இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை பொழிந்து தமிழகம் குளிரும் என எதிர்பார்த்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்ற தகவலானது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும்...
English Summary
tamilnadu weatherman report for coming days