28 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஒரு மணி நேரத்தில் 60 மி. மீ மழை பதிவானது.. வெதெர்மேன் பிரதீப் ஜான் தகவல்.. !! - Seithipunal
Seithipunal


சென்னையில் கடந்த 1996ம் ஆண்டுக்குப் பிறகு நேற்று தான் மிக அதீத மழை பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு வெதெர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

சென்னையில் நேற்று மதியம் வரை 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக இரவில் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து மழை கொட்ட ஆரம்பித்தது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்றுடன் அதீத மழை பெய்யத் தொடங்கியது.

இதையடுத்து பல்வேறு பகுதிகளில் சாலைகளில் நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே சென்னையில் பகலில் வெயில் கொளுத்தினாலும் கடந்த சில நாட்களாகவே இரவில் மட்டும் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் முன் கூட்டியே தெரிவித்துள்ளது. இந்நிலையில் வெதெர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று சென்னையில் பெய்த மழை குறித்து பதிவிட்டுள்ளார். 

அதில் அவர், "சென்னையில் வழக்கமாக ஜூலை மாதம் முழுவதுமே 100 மி. மீ மழை தான் பெய்யும். ஆனால் நேற்று 1 மணி நேரத்திலேயே 60 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. 1996ம் ஆண்டுக்குப் பிறகு சென்னை இந்த அளவு அதீத மழையை இப்போது தான் சந்தித்து இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Weather Man Pradeep John Says Chennai Receives 60mm Rain In one Hour After 28 Years


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->