இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்! 28ஆம் தேதி வரை வாட்டி வதைக்கப் போகும் வெயில்.! - Seithipunal
Seithipunal


இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திர வெயில். வருகின்ற 28 ஆம் தேதி வரை வெப்பம் வாட்டி வதைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெயில் உச்சத்தை எட்டிய நிலையில், நேற்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் நேற்று அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

இந்நிலையில் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குவதால் வழக்கத்தைவிட அதிக வெப்பநிலை இருக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் அனல் காற்று மற்றும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, வருகின்ற 28 ஆம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today Start Agni natchathiram


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->