ஐந்து இடங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் மிக்ஜாம் புயல் புதுவைலிருந்து சுமார் 300 கி. மீ. தொலைவில் கிழக்கு - தென்கிழக்கேயும், சென்னையிலிருந்து சுமார் 310 கி. மீ. தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது.

இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட்டும் விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

இந்த மூன்றாம் எண் கூண்டு திடீர் காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்பதை குறிக்கும் வகையில் ஏற்றப்பட்டுள்ளது. இதே போன்று நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

warning cage hoisting third number in five port


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->