வட மாவட்டகளில் அடுத்த 10 நாட்களுக்கு.. வெளுக்க போகும் கனமழை! வெதர்மேன் கொடுத்த அலர்ட்! ! - Seithipunal
Seithipunal


வடமேற்கு வங்க கடலில் காற்றழுத்து தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் மேற்கு திசை காற்று வேகமா மாறுபாடு காரணமாக ஒன்பது மாவட்டங்களில் மழை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை முதலே வட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் வட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு மாலை முதல் அதிகாலை வரை பரவலாக மழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒடிசா அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு தரைக்காற்று அதிகமாக வீசுகிறது. இதனால் ஏற்பட்டுள்ள வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. காலை முதல் மாலை வரை வெயில் அடித்து இரவு முதல் அதிகாலை வரை வட மாவட்டங்கள், வட உள்ள மாவட்டங்களின் பெரும்பாலான பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

வட மேற்கு  திசையில் இருந்து காற்று வீசுவதால் சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய வட மாவட்டங்களில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும். அடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை வட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்துள்ளது. 

தற்போது பெய்து வரும் மழையானது அடுத்த 10 நாட்களுக்கு வடதமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இரவு முதல் அதிகாலை வரை பெய்யக்கூடும். அடுத்த 10 நாட்களுக்கு பெய்ய வேண்டிய சராசரி மழையை விட அதிக மழை வட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பதிவாகலாம். குறிப்பாக ஆந்திர எல்லையில் அமைந்துள்ள அனைத்து மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு சராசரியை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Weatherman Pradeep John said North TN will receive more than normal rains for next 10 days.


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->