இரவில் "டமால் டுமீல்" தான்! டெல்டாவில் 100 மி.மீ மழை பதிவாகும்! வெதர்மேனின் கனமழை எச்சரிக்கை!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக வட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

சென்னையில் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இருப்பினும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யாததால் குருவை சாகுபடிக்காக விதைக்கப்பட்ட நெற்பயிர்கள் நீரின்றி காய்ந்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் "தமிழகம் முழுவதும் ஒரு நாள் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் "சுருக்கமாகச் சொன்னால், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், நெல்லை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் விடுபட்ட மழை அடுத்த ஒரு வாரத்தில் பெய்ய கூடும்.  டெல்டாவிலும் சில மாவட்டங்களில் 100 மி.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த ஒரு வாரம் தமிழக மற்றும் சென்னை முழுவதும் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த ஒரு மாதமாக இந்தியாவிலேயே அதிக வெப்பமான இடமான பாளையங்கோட்டையில் நேற்று 40.6° C என்ற பதிவான வெப்பம் பதிவாகியுள்ளது.

அடுத்த மாதம் மத்தியில் பாளையங்கோட்டையில் முதற்கட்ட மழை பெய்யக்கூடும். சென்னையில் இரவு நேரத்தில் மீண்டும் டமால் டூமீல்கள் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் ஆகஸ்ட் மாதத்தின் மழை பொழிவு "இடைவெளி பருவமழைக்காலம்" தொடரும். இந்த தென்மேற்கு மழை சென்னையில் மிக அதிகமாக உள்ளது" என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Weatherman warned heavy rain across TN


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->