செங்கடலில் போர்.. ஏமனை கூட்டாக அடித்து நொறுக்கும் 10 நாடுகள்..!! - Seithipunal
Seithipunal


செங்கடல் வழியாக வரும் சர்வதேச சரக்கு கப்பல்களை ஏமனை சேர்ந்த ஹவுதி  அமைப்பினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் முதல் சரக்கு கப்பல்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் இன்று  ஏமன் நாட்டின் ஹவுதி அமைப்பினர் குறி வைத்து 10 நாடுகள் ஒன்றிணைந்து கூட்டாக ஏமன் விமான நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன

ஏமன் நாட்டின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 நாடுகளின் கூட்டுப் படையினர் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, தென் கொரிய, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பக்ரைன், டென்மார்க், ஜெர்மனி இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஏமன் நாட்டின் சனா விமான நிலையம் மற்றும் முக்கிய நகரங்கள் மீது 10 நாடுகளின் கூட்டுப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நீர்மூழ்கி கப்பல்கள்,  போர் விமானங்கள் மூலம் சனா, அல் ஹுதைதா, சத்தா, தாமர் ஆகிய நகரங்கள் மீது 10 நாடுகளின் கூட்டுப்படை வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீது ஏமன் படைகள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. சரக்கு கப்பல்களை வழிமறித்து ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சர்வதேச அமைப்புகளின் தொடர்ச்சியான எச்சரிக்கையை மீறி ஏமன் தாக்குதல் நடத்தியதால் பதிலடி கொடுக்கப்படுகிறது என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் விளக்கமளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 countries attacked Yemen


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->