ஒரே கிராமத்தில் 1100 யூடியூபர்கள் - ஆட்சியர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.!
1100 youtubers at thulasi village in chateesgarh
ஒரே கிராமத்தில் 1100 யூடியூபர்கள் - ஆட்சியர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துளசி என்ற கிராமத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளது. அவற்றில் சுமார் 1100 பேர் தனியாகவும், குழுவாகவும் தங்கள் திறமைகளை நிரூபித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தின் புகழ் இந்த யூடுயூபின் மூலமாக வெளியுலகுக்கும் பரவியது. இந்த புகழ் கூடவே அவர்களது படைப்பின் குறைகளும் வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது, போதிய தொழில்நுட்ப சாதனங்கள் இல்லாததால், வீடியோக்களின் தரம் குறைவாக இருந்தது.
இந்தத் தகவலை ஊடகங்கள் பதிவு செய்யவே, இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சர்வேஸ்வர் நரேந்திர புரே, துளசி கிராமத்துக்கு வருகை தந்து யூடியூபர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இதையடுத்து தொழில்முனைவோர் என்ற அடிப்படையில் அவர்களுக்காக, ஒலி மற்றும் ஒளிப்பதிவுக்கான நவீன அம்சங்கள் கூடிய ’ஹமர் ஃபிலிக்ஸ்’ ஸ்டுடியோ ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
மேலும், வீடியோ எடிட்டிங், மிக்ஸிங் உள்ளிட்டத் தேவைகளுக்கான கம்ப்யூட்டர் சாதனங்கள் அவற்றுக்கான மென்பொருட்களுடன் வழங்கப்பட்டது. அரசின் இந்த செயல் மூலம் துளசி கிராமத்தில் இருக்கும் 40க்கும் மேலான யூடியூப் சேனல்களின் தரம் கூடியுள்ளது.
இதைப் பார்த்து மற்ற கிராமங்களில் இருக்கும் யூடியூபர்களும் தனி ஸ்டுடியோ கோரி அரசுக்கு கோரிக்கை விடுக்கவே, மாநிலம் தழுவிய திட்டமாக யூடியூபர்களை அரவணைத்து வளர்த்துவிட புதிய திட்டங்களை சத்தீஸ்கர் அரசு உருவாக்கி வருகிறது.
English Summary
1100 youtubers at thulasi village in chateesgarh