நைஜீரியாவில் கச்சா எண்ணெய் திருட்டின்போது பயங்கர வெடி விபத்து - 12 பேர் பலி - Seithipunal
Seithipunal


நைஜீரியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் தலைநகர் நைஜர் நகரத்தில் டெல்டா பகுதியில் முறையாக உரிமம் பெறாமல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று உள்ளூர்வாசிகள் சுத்திகரிப்பு நிலையத்தில் சிலர் கச்சா எண்ணெய் திருட முயற்சித்தபொழுது எண்ணெய் குழாயில் எதிர்பாராத விதமாக பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் கச்சா எண்ணெய் குழாய் தீ பற்றி பல மணிநேரம் கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்த வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஐந்து வாகனங்கள், நான்கு ஆட்டோ ரிக்‌ஷாக்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து நாசமாகின. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 people killed in explosion when stealing crude oil in Nigeria


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->