எல் சால்வடார் : கால்பந்து மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


கால்பந்து மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி.!

எல் சால்வடார் நாட்டின் தலைநகரான சான் சால்வடார் பகுதியில் கஸ்கட்லான் கால்பந்து மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் தற்போது சால்வடார் லீக் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி போட்டி அலியான்சா மற்றும் எப்.ஏ.எஸ். என்ற இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. 

இந்த போட்டி தொடங்கியது முதல் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. இந்த போட்டியை வெளியில் இருந்தும் மரங்கள் மற்றும் உயரமான கட்டிடங்கள் மீது ஏறி ஏராளமான ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். 

அப்போது, வெளியில் நின்ற ரசிகர்கள் திடீரென மைதானத்தின் நுழைவாயில் கேட்டை உடைத்துக் கொண்டு அத்துமீறி உள்ளே நுழைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக போட்டி இடை நிறுத்தப்பட்டது. 

சுமார் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைய முயன்றதால் அங்கு கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், சிக்கி சுமார் 12 பேர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 peoples died for croud in el salvador


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->