கடும் குளிரால் அவதிப்படும் ஆப்கானிஸ்தான் - 124 பேர் பலி - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைத்ததிலிருந்து அந்நாட்டின் ஏற்றுமதி, அரசியல் மற்றும் பொருளாதார சூழல்கள் முற்றிலும் மாறியுள்ளன. மேலும் பெண்கள் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக பனிப்பொழிவு மற்றும் அதீத குளிரினால் ஆப்கானிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பல பகுதிகள் பனியால் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. கடந்த 15 நாட்களில் மட்டும் கடுமையான குளிரினால் 124 பேர் உயிரிழந்ததாக தலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 70,000 கால்நடைகள் கடும் குளிரினால் உயிரிழந்ததாக பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்றுவதற்கு தடை விதித்ததை எதிர்த்து, பேரிடர் காலங்களில் பணியாற்றும் தொண்டு நிறுவனங்கள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதாக ஆப்கானிஸ்தான் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் பெண்கள் மீதான தடையில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும், பேரிடர் மீட்பு பணியில் அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

124 died in extreme cold in Afghanistan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->