இத்தாலியில் கொட்டி தீர்த்த கனமழை... ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் - 13 பேர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


ஐரோப்பிய நாடான இத்தாலியின் வடக்கு பகுதியான எமிலியா-ரோமக்னா மற்றும் கடலோர நகரமான ரவென்னாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 35 நகரங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 120 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் கனமழை காரணமாக ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தும், சாலைகள், வீடுககள், தெருக்களில் வெள்ளம் புகுந்துள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, இரவு பகல் பாராமல் பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்டுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சக பிரதிநிதி தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 14000 மக்கள் மீட்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

13 died as heavy rain flood lashes out in italy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->