ரஷ்யாவின் தாக்குதலில் 13 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் பலி.! - Seithipunal
Seithipunal


நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய விரும்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து தாக்குதல் வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் நிதி உதவிகளையும், ஆயுதங்களையும் வழங்கி ஆதரவு தெரிவித்து வருகின்றது. 

மேலும் ரஷ்ய படைகள் கைப்பற்றிய முக்கிய நகரங்களை மீண்டும் உக்ரைன் படைகள் கைப்பற்றியுள்ளதால், ரஷ்ய படைகள் தீவிரத் தாக்குதல் ஈடுபட்டு கடந்த வாரம் மட்டும் 30 குடியிருப்புகள் மீது ரஷ்யப் படைகள் 258 முறை ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இப்போரில் உக்ரைன் மற்றும் ரஷ்யா என இருதரப்பு ராணுவமும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன நிலையில், போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை சுமார் 13 ஆயிரம் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மூத்த ஆலோசகரான மைக்கைலோ போடோலியாக் தெரிவித்ததாவது, மூத்த ராணுவ அதிகாரிகளிடம் இருந்து அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் கிடைத்துள்ளன. இதில் 10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் காயமடைந்த துருப்புகளின் எண்ணிகையும் கணிசமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

13 thousand ukraine soldiers killed war in Russia attacks


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->